ராமேஸ்வரத்துக்கு வந்த "சீன பயணி"யால் திடீர் பதற்றம்

0 1987

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீன பயணியால் திடீர் பரபரப்பு உருவானது.

சீனாவைச் சேர்ந்த இளைஞர் செங்ஸூ  ஜனவரி 28ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அவர் இன்று ராமேஸ்வரம் வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரைப் பார்த்ததும் அவருக்கு கொரானா வைரஸ்  பரிசோதனை செய்யப்பட்டதா? என தெரியாததால் சுற்றுலா பயணிகள் பதட்டம் அடைந்தனர்.

image

தனக்கு கொல்கத்தாவில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் பாதிப்பு இல்லாததால் தமிழகத்திற்குள் அனுதித்ததாகவும் சீன இளைஞர் தெரிவித்தார். ஏற்கனவே, அவருக்கு சோதனை நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், தேவைப்பட்டால் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றனர். மேலும், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடையத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments